ஹைதராபாத் ஐபிஎல் அணியை சன் டிவி குழுமம் வாங்கியுள்ளது.





மும்பை:
ஐபிஎல் குழுவில் இருந்து டெக்கான் சார்ஜர்ஸ் அணி நீக்கப்பட்ட நிலையில்,
ஹைதராபாத் நகரை அடிப்படையாக கொண்ட புதிய அணியை சன் டிவி குழுமம்
வாங்கியுள்ளது.
ஐபிஎல் குழுவில் இருந்து ஹைதராபாத் நகரை அடிப்படையாக
கொண்ட டெக்கான் சார்ஜர்ஸ் அணி செயல்பட்டு வந்தது. ஆனால் வீரர்களுக்கு
சம்பள பாக்கி வைத்தது தொடர்பான பிரச்சனையில், விதிமுறைகளை மீறியதாக அந்த
அணி ஐபிஎல் குழுவில் இருந்து நீக்கப்பட்டது.